இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 45ஆவது துணைப் படைத் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.