யாழ். மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டம், இன்றையதினம்(06) வியாபாரிகளின் கடை தொகுதியின் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
தங்களது கடைகளுக்கு முன்னால் அளவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வியாபாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-246.png)
தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் குறித்த வியாபாரிகள், இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம் முழுமையாக மாநகர சபையினரால் பறிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேநேரம், வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து ஏறக்கறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-247.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-248.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-249.png)