ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவானது, இலங்கைக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்திற்கு சவால் விடுக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு, கலப்பின நீதிமன்றம் அமைப்பது போன்ற திட்டங்களை அமெரிக்கா முன்வைத்தது. அதனை மேற்குலக நாடுகள் ஆதரிக்கின்றன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-259.png)
இந்நிலையில் இந்தத் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாம் உருவாக்கும் மனித உரிமைகள் திட்டத்தை நாமே முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றால், இலங்கைக்கு எதிரான முந்தைய திட்டத்தை முறியடிக்க முடியும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.