Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெறுப்பு, சேறு பூசலை பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம்; ஹெக்டர் அப்புஹாமி

வெறுப்பு, சேறு பூசலை பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம்; ஹெக்டர் அப்புஹாமி

2 years ago
in அரசியல், செய்திகள்

வெறுப்பு, சேறு பூசலை பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஆளும் தரப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(06) நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றியதாவது,

புலமை சொத்து சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி பற்றி ஆளும் தரப்பினர் பேசவில்லை. மாறாக வெறுப்புக்களை மாத்திரமே தமது உரையில் முன்வைக்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டை மீளப்பெறுவதையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவுகளின் விலையை அதிகரிப்பதையும் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் ஏனெனில் கடந்த காலங்களில் போதுமான அளவு பேசி முடித்து விட்டீர்கள்.

ஆகவே வெறுப்பு, சேறு பூசலை பிரத்தியேக நாமமாக கொண்டு செயற்பட வேண்டாம்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது அதற்கு எதிராக ஒன்றிணைவது எதிர்க்கட்சிகளின் கடப்பாடாகும்.

எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் ஆளும் தரப்பினருடனா? பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.

இதேவேளை இலங்கையின் தேயிலை சீன நாட்டு தேயிலை உற்பத்தியாகவே சர்வதேச சந்தையில் விநியோகிக்கப்படுகிறது. இலங்கையின் உற்பத்திகளின் பிரத்தியேக நாமம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

ஆகவே இழக்கப்பட்டுள்ள உற்பத்தி நாமத்தை மீள பெற்றுக்கொள்வதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஒழுங்கு விதிகளை நிறைவேற்றி விட்டு அவற்றை கிடப்பில் போடாமல், முறையாக செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

தேங்காய் உட்பட உபரி பயிர்ச்செய்கைகளை ஊக்குவிப்பதற்கு விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். தேங்காய் பால் எடுக்க வேண்டாம், தேங்காய் சம்பல் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுங்கள். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம்.” என கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
Next Post
கிளிநொச்சியில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரின் செயற்பாடு

கிளிநொச்சியில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரின் செயற்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு