அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் பயணித்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-267.png)
விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று (06) பிற்பகல் 2.37 மணிக்கு உனலக்லீட்டில் இருந்து புறப்பட்டு, கடைசியாக நார்டன் சவுண்ட் பகுதிக்கு மேல் பிற்பகல் 3.16 மணிக்கு தரவை அனுப்பியதாக விமானப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-268.png)
முன்னதாக, வொஷிங்டன், டிசியில் ஒரு இராணுவ விமானமும் ஒரு ஜெட் விமானமும் நடுவானில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.