கஸகஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பென்தொட்ட கடலில் மூழ்கி குறித்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் நீந்திக் கொண்டிருந்த போது குறித்த 63 வயதான நபர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான அலைகளினால் வெளிநாட்டுப் பிரஜை அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-279.png)
நீரில் அடித்துச் சென்றவரை பொதுமக்கள் மீட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வெளிநாட்டுப் பிரஜை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.