கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 11,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு கமராக்களை விடுவிப்பதற்காக, அவர் குறித்த இலஞ்சப் பணத்தை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-292.png)
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபாரதத் தொகையாக 31,000 ரூபா விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி மகேன் வீரமன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த நபர், பாதுகாப்பு கமராக்களை விடுவிப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி இலஞ்சப் பணத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.