முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்புக்காக 07 துப்பாக்கிகளை மீளப் பெற்றுக்கொண்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ள பின்னணியில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-293.png)
யோஷிதவிடம் 07 துப்பாக்கிகள் உள்ளதென முதலில் செய்தி வெளியாகும் போது அவர் வெளிநாட்டில் இருந்துள்ளார்.
இந்த செய்தி வெளியாகியவுடன் இலங்கை வந்த யோஷித அனைத்து துப்பாக்கிகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்.
07 துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் 07இல் 05 துப்பாக்கிகள் ஏற்கனவே ஒப்படைத்துள்ளதுடன் எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளையும் அரசிடம் கையளித்துள்ளார்.
இந்த நிலையில் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு ஒரு துப்பாக்கி வழங்க வேண்டும் எனவும் யோஷித ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.