இன்றைய (11) தைப்பூச தினம் என்பது உலகளவில் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் முருகனுக்குரிய விசேட நாளாகும். ஆலயங்களுக்கு சென்று, வழிபாடுகளில் கலந்துகொண்டு, நெற்கதிர்களை பெற்று, தங்களது வீடுகளில் உள்ள வழிபாட்டறைகளில் வைத்து வணங்கி வந்தால், இவ் வருடம் முழுவதும் அன்னலக்சுமி குறைவில்லாமல் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அந்த அடிப்படையில் கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

பக்த அடியார்கள் பெருமளவில் திரண்டு, இந்த தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேசமயம் குறித்த வழிபாடுகளின் போது பக்த அடியார்களுக்கு நெற்கதிர்கள் வழங்கப்படவுள்ளதுடன், அன்னதானமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.