யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (9) கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-425.png)
சம்பவத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் , பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.