இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டு முயற்சியாண்மை-2023 என்னும் செயற்திட்டதின் கீழ் விற்பனை கண்காட்சி நிகழ்வு நடைபெற்றிருந்தது.
இன்று (31.07.2023) காலை 9:30 மணியளவில் ஆரம்பமான இந்த கண்காட்சியில் மரத்தினால் உருவாக்கப்பட்ட உற்பத்தி பொருட்கள், மரக்கறிவகைகள்,சிறுதானிய உற்பத்திகள், தின்பண்டங்கள் மற்றும் வேறு சில உள்ளூர் உற்பத்திகளும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் நடத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.