மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கைக்குண்டு நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-471.png)
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.