கடந்த மாதம் அமெரிக்காவில் எதிர்பாராத பணவீக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முட்டை மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதமாக அதிகரித்துள்ளதோடு இது எதிர்பார்த்த 2.9 சதவீதத்தை விட அதிகம் என கூறப்படுகின்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-493.png)
அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்க முடிவு செய்ததையடுத்து, அமெரிக்க பொருளாதாரம் கேள்விக்குட்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே இந்த பணவீக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பொருளியலாளர்கள் கணித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-494.png)
குறித்த விடயம், தேர்தல் பிரசாரங்களில் பணவீக்கத்தை பிரதான பேசுபொருளாக மாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.