சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ஆம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-495.png)
விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டதற்கு காரணம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்தான் என்று அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2025/02/image-496-1024x614.png)
மேலும், விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ரொக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்துள்ளது.
மார்ச் 25ஆம் திகதிக்கு பதிலாக 12ஆம் திகதியே விண்ணில் ஏவப்படும் SpaceX விண்கலம், புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.