அவுஸ்திரேலியாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள வில்லாச் நகரில் நேற்று (15) வீதியோரம் நடந்து சென்றவர்கள் மீது சுமார் 23 வயது நிரம்பிய இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதில் 14 வயது நிரம்பிய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர், சிரியாவைச் சேர்ந்தவர் என்பதும், அவுஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாக குடியேறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபரின் தனிப்பட்ட பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதோடு கைது செய்யப்பட்ட நபர், தானாக இந்த தாக்குதலை நடத்தினாரா? அல்லது வேறு நபர்களின் தூண்டுதலால் இவ்வாறு செய்தாரா? என்பது தெரியவில்லை. வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.