மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(17) நாடாளுமன்றில் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி தோட்ட வீட்டு அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மலையக தமிழ் இளைஞர்களில் தொழிற்பயிற்சி உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
மற்றும் மலையக பாடசாலைகளின் டிஜிட்டல் வகுப்பறை அபிவிருத்திக்காக 866 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.