பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஏனெனில் இன்று (18) நிலவும் வெப்பமான வானிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ஒரு சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிடும்.

சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முன்பு சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவோம்.
நிலவும் வெப்பமான சூழ்நிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் கால அளவைக் குறைக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இன்றைய தினம் (18) வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
