2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி காலி கொழும்பு பிரதான வீதியில் உரவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரையும், பெண்ணையும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் படபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட போதிலும், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல்களை அறியும் பொதுமக்கள் 071-8591484 அல்லது 091-2291095 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.