கல்கிசை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கையின் போது, கல்கிசை, படோவிட்ட தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில், 30 தோட்டாக்களுடன் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது.

சமீபத்தில் காணாமல் போன கான்ஸ்டபிள் துபாய்க்கு பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் தீடீரேன காணாமல் போனது சந்தேகத்தை எழுப்பியதுடன், விசாரணையைத் தூண்டியது, இது அவரது துப்பாக்கியைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக 41 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரது பங்கு மற்றும் காணாமல் போன அதிகாரிக்கு ஏதேனும் சாத்தியமான தொடர்புகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கல்கிசை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.