சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை விடயமானது தற்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.
யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக கடந்த 11,12ஆம் திகதிகளில் போராட்டம் ஆரம்பமானது.
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று பொகவந்தலாவ ராகுல தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அவர்,
அடுத்தவர் காணியை அபகரித்து விகாரை கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்?
அடுத்தவர்களுடைய காணியை அபகரித்து கட்டிய விகாரைக்கு மின்சார சபை மின்சாரம் கொடுத்தது எப்படி? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.