தேசிய கீதத்தை சிதைத்து பாடியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய புதிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய கீதம் அரசியலமைப்பினால் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை எனவும், அதன் எழுத்துக்களை மாற்றுவதற்கும் ஒரு எழுத்தைக்கூட, பாராளுமன்றத்தின் 2/3 வாக்குகள் மற்றும் மக்கள் கருத்து அவசியம் எனவும் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
2023 லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவின் போது உமாரா சின்ஹவன்சா தேசிய கீதத்தை ஓப்பரேடிக் ட்யூனில் பாடியது இந்த சர்ச்சையை தூண்டியுள்ளது.