முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஊடாக, சிலாபத்தில் உள்ள ஒரு வங்கியின் கணக்கில் 494,000 தொகையை வைப்பு செய்யுமாறு தூண்டிய ஊழல் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் அனைத்தும், இன்று மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதன் பின்னர், முன்னாள் அமைச்சரை தலா 500,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.