எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (18) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உரிய முறையில் வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது வழங்கப்படக்கூடிய அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.