குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (19) முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அதன்படி, இன்று முதல் இரவு நேரங்களில் பத்தரமுல்ல பகுதிக்கு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.