கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நேற்று (18) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக Techno Park நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக துறையின் பீடாதிபதி பேராசிரியர் என்.இராஜேஸ்வரன் உள்ளிட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீடுகளுக்கு ஆதரவு வழங்குவோரின் கண்காட்சிக்கூடங்களை அதிதிகள் பார்வையிட்டனர்.

இதன் போது தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதி சந்தையினுல் இணைத்து அவர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்து, அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வருடம் இலங்கையில் இருந்த 12 பில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியான பொருட்கள் எற்றுமதி செய்யப்பட்ட போதிலும் 19 பில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதனால் இந்நிலையை மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் மற்றும் முயற்சியாளர்களுக்கான வங்கி கடன்கள் வழங்குதல், குத்தகைக்கு காணி வழங்குதல் போன்ற மேலும் பல விடையங்கள் இதன் போது உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.






