இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) கொள்வனவு செய்யப்பட்ட பருவ சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியோர்களை ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை தயக்கமின்றி ஏற்றிச் செல்ல வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சீசன் டிக்கெட்டுகள் தொடர்பான சிரமத்தை எதிர்கொள்ளும் பயணிகள், அமைச்சகத்தின் அவசர தொடர்பு எண், 1958 மூலம் புகார்களை உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.