பதுளை-கொழும்பு பொடிமனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பதுளை மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில், புகையிரத வாயில் பலகையில் தொங்கி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 53 வயதான பெர்மினோவா ஓல்கா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் பாறையில் மோதி, ரயிலில் இருந்து விழுந்து பலத்த காயம் அடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் அவர் இலங்கை வந்து, இன்று (19) காலை பதுளை புகையிரத நிலையத்தை அடைந்த பின்னர், கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் பொடிமனிக்கே ரயிலில் ஏறி, எல்ல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.