மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்றைய தினம் ( 22 ) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு. S. மதிசுதன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர், தாபனமும் பொதுமுகாமைத்துவமும், மட்டக்களப்பு கல்வி வலயம், திரு. K. ஹரிகரராஜ் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக திரு. R.J. பிரபாகரன் பிரதிக்கல்விப் பணிப்பாளர் – மட்டக்களப்பு கல்வி வலயம் ,திரு. S. தில்லைநாதன் EPSI இணைப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி மண்முனைப்பற்று, திரு. V. ரவீந்திரன் ஆசிரியர் ஆலோசகர் உடற்கல்வி மட்டக்களப்பு கல்வி வலயம் போன்ற பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது குறிஞ்சி, முல்லை, மருதம் என 03 இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன. மேலும் அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு தேசியக்கொடி , பாடசாலை கொடி ,இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு பின்னர் , இறைவணக்கம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் , மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி மாணவர்களின் அணிநடை மரியாதை , அதிதிகள் உரை , மாணவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


