Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், இன்று (06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் இதுவரையில் 18 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையுடன் (7) முதலாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைவதனால் , தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை அடுத்து , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதித்துள்ளது.

அதேசமயம் அரியாலை செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் 3 கைக்குழந்தைகள் உட்பட 20 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு