இந்த வருடத்தில்(2025) பெப்ரவரி மாதத்தின் முதல் 20 நாட்களில் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 436 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 428,197 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 68,668 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவிலிருந்து 56,376 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 40,515 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 27,443 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 25,427 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும், பிரான்ஸிலிருந்து 23,806 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 15,828 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.