ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமத்தித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.