இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதிலுள்ள அரசமைப்பின் 13 ஆவதுதிருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் எனவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் எம்.பிக்களிடம் நேற்று நேரில் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய தூதுவருக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.இந்திய தூதுவர் கோபால் பாக்லே, பிரதித் தூதுவர், அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டவர்கள்
இதில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தரப்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலை யரசன் ஆகியோரும் பங்கேற்றர்.இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்னென்ன விடயங்கள் இந்திய தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்திய தூதர் விளக்கமளித்தார்.இரு நாட்டுக்குமிடையில் பாலம்அமைப்பது, மின்சக்தி இணைப்பு உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பேசப்பட்டதாகவும், 13ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தியதாகவும் தூதர்குறிப்பிட்டார்.
இரண்டு கட்சிகளும் எப்படியான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என தூதுவர் அவர்களிடம் கேட்டார்.
13ஆவது திருத்தத்தை இறுதி இலக்காகக் கொள்ளவில்லையென்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப்
பெற விரும்புவதாகவும் அவர்கள்குறிப்பிட்டனர்.இதேவேளை, திருகோணமலைமாவட்டத்தை தாம் அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்திய தூதர் குறிப்பிட்டார். துறைமுகம், சக்தி, முதலீட்டு வலயம் ஆகியவற்றில் இந்தியா பங்களிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டபோது, என்
னென்ன விடயங்கள் இந்தியத் தரப்பினால் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து இந்தியத் தூதுவர் விளக்கமளித்தார். அத்துடன் இலங்கை – இந்தியக் கூட்டறிக்கையையும் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் இந்தியத் தூதுவர் கையளித்தார்.