மரதன்கடவலவில் நிகழ்நிலை வர்த்தகத்திற்காக குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரதன்கடவல மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்லைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒரு தொகை போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு இரகசிய தகவலின் பேரில், சந்தேக நபரிடமிருந்து 104 பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் விசாரணைகளில், சந்தேக நபர் தனது மேற்சட்டைக்குள் போதைப்பொருளை புத்திசாலித்தனமாக மறைத்து வைத்திருந்ததுடன், குளிர்பான போத்தல்களையும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டத்தட்ட 5.25 கிராம் எடையுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.