அனுராதபுரத்திலிருந்துபெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கண்டேகொடைதொடருந்து நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் எல்பிட்டிய, எல்ல வீதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார். மாணவன் தனது மொபைல் போனில் காது மாட்டியை பயன்படுத்தி தொடருந்து தண்டவாளத்தில் தனியாகப் பயணித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவருக்கு தொடருந்தின் கோன் சத்தம் கேட்காததால் பின்னால் வந்த தொடருந்து அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனாவான்.
பாடசாலை மாணவர்கள் தண்டவாளங்களில் நிற்பது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அம்பலங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.