பாலியல் சார் நேரலை ஒளிபரப்புகள் மூலம் டிக்டொக் செயலி அதிக வருமானம் ஈட்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகமான பி.பி.சி செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இளைஞர்களின் நன்மதிப்பைப் பெற்ற செயலியாக டிக்டொக் காணப்படுகிறது.

பெரும்பாலும் ஓய்வு நேரங்களை செலவழிக்க இந்த செயலியைப் பயன்படுத்தினாலும் பலரும் இதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
பாலியல் சார் நேரலை ஒளிபரப்புகள் மூலம் டிக்டொக் செயலி தற்போது அதிக வருமானத்தை ஈட்டுவது தெரியவந்துள்ளது.
கென்யாவில் உள்ள மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.