சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் கையிருப்பு தரையிறக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அதேபோல் அதன் 2 ஆவது எரிபொருள் இருப்பு இன்று (02) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டதன்
பின்னர் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள்நிரப்பு நிலையங்களுடன் பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் நுழைவது பெற்றோலிய பொருட்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகளை எளிதாக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபோருள் நிரப்பு நிலையங்களுடன்பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.