குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் பிடதெனிய பகுதியில் உள்ள தொரப்பிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக மேற்கூறிய நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 துளை துப்பாக்கியுடன் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.