மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள். அதுபோல் தத்தமது வீடு வளவுகளிற்குள்ளும், கொட்டகைகள் அமைத்து தமது வீட்டுக் பிள்ளைகளைப்போல் தீனிபோட்டுக் கொண்டு கால்நடைவளர்ப்பிலும் அதிகளவு பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப்பெருக்கினால் விவசாயச் செய்கை மாத்திரமின்றி, கால்நடை வளர்ப்பும் வருடாந்தம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் வருடாந்தம் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் மக்களின் வாழ்வாதாரம் “சாண்ஏற முழம் சறுக்குவது” போன்று காலத்திற்கு காலம் நலிவடைந்து வருவதாக கால்நடைவர்ப்பில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்திற்குப் போராடி வரும் பண்ணையார்கள் அங்கலாய்க்கின்றனர்.

இது தொடர்பில் ஒரு பண்ணையாளர் தெரிவிக்கையில்,
எனது பிள்ளையார் பாற் பண்ணையில் 475இற்கு மேற்பட்டவர்கள் அங்கத்துவம் வைகிக்கின்றார்கள். ஆனால் தற்போது 65இற்குட்பட்டவர்கள்தான் பால் கறக்கிறார்கள். அனைவரும் கடந்த காலங்களில் இருந்து மிகவும் ஆர்வத்துடன் கால்நடை வளர்ப்புக்களில் ஈடுபட்டு வந்தனர். எனினும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாலுக்கான விலை தளம்பல் காரணமாகவும், கால்நடைகளுக்குரிய தீவனங்களின் விலை உயர்வு காரணமாகவும், பால் உற்பத்தி படிப்படியாக குறைவடைந்துள்ளது.





தினமும் எமது பால் சேகரிப்பு நிலையத்திற்கு குறைந்தது 500 தொடக்கம் 600 லீட்டர் பால் நாங்கள் சேகரிப்போம். இப்போது 200 தொடக்கம் 220 லீட்டர் வரையான பால்தான் எமக்கு கிடைக்கப் பெறுகின்றன.
இந்த அளவிற்குதான் பண்ணையாளர்கள் பால்உற்பத்தியை மேற்கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். பால்லுற்பத்தியை அதிகரித்து பாலுற்பத்தி கிராமமாக முற்று முழுதாக இந்த கிராமத்தை மாற்றுவதற்கு இவ்வாறான விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வு கண்டுதர வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுகின்றோம். என மீதமுள்ள பிள்ளையார் பாற்பண்ணையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
