மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தணமல்வில பகுதியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் அனைவரும் மற்றுமொரு பஸ்ஸில் ஏற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.