Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சுங்கத்தில் மறுசீரமைப்பு; ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை சுங்கத்தில் மறுசீரமைப்பு; ஜனாதிபதி தெரிவிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

சுங்கத்தின் செயற்திறனின்மை, மோசடி, ஊழல் மற்றும் பொதுமக்களிடையே காணப்படும் அதிருப்தி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதற்கு தீர்வாக, திணைக்கள செயல்பாடுகளை விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

திணைக்களத்திற்கான புதிய மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுங்கத்தில் காணப்படும் முறைகேடுகளை அகற்ற கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மனிதவள முகாமைத்துவம், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த வருமான இலக்குகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், இந்த வருட வருமான இலக்கை அடைய சுங்கத் திணைக்களம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி. நோனிஸ் உட்பட இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!

October 23, 2026
இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!
செய்திகள்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!

October 23, 2026
ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!

October 23, 2026
கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
Next Post
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் போட்டிகளிலிருந்து ஒருநாள் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் போட்டிகளிலிருந்து ஒருநாள் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு