அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான செம்பியன்ஸ் கிண்ண முதலாவது அரையிறுதிப் போட்டியில் 73 ஓட்டங்களைப் பெற்று எடுத்து அவுஸ்திரேலிய அணிக்குப் பெருமை சேர்த்தார்.
35 வயதான இவர் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் உட்பட 5800 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்காக அதிக ஓட்டங்களைப் பெற்ற 12 ஆவது வீரராவார்.
2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 164 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், ரி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.