Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மில்லரை அடுத்து தனுஷின் அடுத்த மூன்று படங்களில் ஆர்.ரஹ்மான்?

மில்லரை அடுத்து தனுஷின் அடுத்த மூன்று படங்களில் ஆர்.ரஹ்மான்?

3 years ago
in சினிமா, செய்திகள்

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தற்போது அவரது 50வது படத்தில் பிஸியாக காணப்படுகிறார்.

இன்னொரு பக்கம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்திற்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் முன்னணி நடிகராக கலக்கி வரும் தனுஷ், தற்போது பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச அளவிலும் தடம் பதித்து வருகிறார். கடந்த வாரம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியானது. இதனைத் தொடர்ந்து விரைவில் கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தனுஷ் தனது 50வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் இயக்குனரும் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. வடசென்னையை பின்னணியாக வைத்து உருவாகும் D 50 படத்திற்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், ஏஆர் ரஹ்மான் தான் D 50 பட இசையமைப்பாளர் எனத் தெரிகிறது. அதேநேரம் தனுஷ் இந்தியில் நடித்து வரும் ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏஆர் ரஹ்மான் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனுஷின் 51வது படம் குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. அதன்படி தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு உட்பட 3 மொழிகளில் உருவாகும் D 51, தனுஷ் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

முக்கியமாக இந்தப் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேரே இஷ்க் மே, D 50, D 51 என வரிசையாக மூன்று தனுஷ் படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்பு, சிவகார்த்திகேயன் என இளம் ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்து வரும் ஏஆர் ரஹ்மான், அடுத்து தனுஷுடனும் அடுத்தடுத்து 3 படங்களில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
நெட்பிளிக்ஸ் கொடுத்த அதிர்ச்சி; 21 கோடி சம்பளம்!

நெட்பிளிக்ஸ் கொடுத்த அதிர்ச்சி; 21 கோடி சம்பளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.