நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், நீதி அமைச்சர் முன்னாள் ஜனாதிபதியை ஒரு திருடன் மற்றும் பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.
இன்று நீங்கள் அனைவரும் வாக்களிக்கப்பட்டு உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கிறீர்கள், ஏனென்றால் மக்கள் மாற்றத்தை விரும்பினர்.

நிர்வாக ரீதியாக மட்டுமல்ல, அரசியல் கலாசார ரீதியாகவும் மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்று அவர் கூறினார்.
இந்தநிலையில், தேசத்தைக் காப்பாற்றிய ஒருவரை திருடன் மற்றும் பிச்சைக்காரன் என்று அழைப்பது பகுத்தறிவற்றது என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டமான், நீதி அமைச்சரின் அறிக்கையைக் கண்டித்ததுடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரினார்
மேலும், ஊழல் தொடர்பான பெயர்களைக் கொண்ட பட்டியல்களை வெளியிட வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமான் கேட்டுக் கொண்டார்.