ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை என சென்னை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக, ஆபாச படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் பொலிஸார் கூறுகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வியாபார நோக்கத்தில் ஆபாச படம் அல்லது வீடியோ பதிவிறக்கம் செய்வது தெரிய வந்தால், குற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுவதுன், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.