யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கோரிக்கை முன்வைத்தார்.
யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக அமைச்சில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது கேட்டுக் கொண்டார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர்களையும் ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்வது மிக முக்கியமாகும்.
யூடியுப் ஊடகவியலாளர்கள் யூடியுப் ஊடாக எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு அவசர தேவையின் போது அவர்களுக்கு வங்கிகளுக்குச் சென்று கடனுதவி பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும் அரசாங்கம் விதித்துள்ள அந்த 15 வீத வரி விதிப்பினூடாக அவர்களுக்குக் கடனுதவிகள் கிடைக்குமா என்று தெரியாது.
177 யூடியுப் செனல்கள் மூன்று வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணி, திசைக்காட்டியின் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக பணியாற்றின, 400 பேஸ்புக் பக்கங்கள் காணப்பட்டன.
தொழில் ரீதியாக அவர்களுக்கு வரவேற்பும் நன்மதிப்பும் கிடைக்குமெனில் அவர்களுக்கு 15 வீத வரி விதிப்பதில் தவறில்லை.
அதனால் யூடியுப் ஊடகவியலாளர்களையும் ஊடகவியலாளர்களாக அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கோரிக்கை முன் வைத்தார்.