“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் “என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்படுகின்றது.
அதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் மகளிர் தின நிகழ்வு, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05) செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மகளிரின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், “களிப்பூட்டுவதன் மூலம் மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவோம் ” எனும் திட்டத்திற்கு அமைவாக இளையோர், முதியோர்களுக்கிடையிலான கருத்து முரண்பாட்டினை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கருத்தாடல் நிகழ்வொன்றும் இடம்பெற்றிருந்தது.

இக் கருத்தாடல் நிகழ்வில் மட்டக்களப்பு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்து தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருந்தனர்.
அதேசமயம் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன், மகளிர் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.























