முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளை தற்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டு வருவதாகவும் சானக கூறியுள்ளார்.

அத்தோடு, இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலிலும் பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பசில் ராஜபக்ச அனைத்திலிருந்தும் விலகி தற்போது அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும் டி.வி. சானக மேலும் குறிப்பிட்டுள்ளார்.