அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் நாளை (17) 3 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை இம்மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதற்கிடையில், அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் சேவையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதன் அழைப்பாளர் சமன் ரத்னபிரியா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும், சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது சுகாதார சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், தற்போதைய அரசாங்கம் மக்களின் பக்கம் நின்று அவர்கள் சார்பாக முடிவுகளை எடுக்க கடமைப்பட்டுள்ளது என்றும், அது தொடர்பாக தயக்கமின்றி செயல்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுயுள்ளார்.
சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடி தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும், எந்த நேரத்திலும் இதற்கு அரசாங்கம் உறுதியளிக்கத் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், நாளையதினம், பதவி உயர்வு மறுப்பு மற்றும் சம்பளக் குறைப்பு உள்ளிட்ட அடிப்படையாகக் கொண்டு தாதியர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.