Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசபந்து தென்னகோனின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

தேசபந்து தென்னகோனின் மனுவை நிராகரித்த நீதிமன்றம்!

1 year ago
in செய்திகள்

தம்மை கைது செய்யாமல் இருக்கக்கோரி உச்ச நீதிமன்றில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிப்பேராணை (ரிட்) மனு தொடர்பான தீர்மானம் இன்று (17) அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்களும் தங்களைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று (16) அறிவித்தது.

அதன்படி, முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை குறித்த ஆறு நபர்களையும் கைது செய்ய வேண்டாம் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், அவர்களது நீதிப்பேராணை மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளன.

தேஷபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா, வெலிகம காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி உபுல் குமார உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டது.

2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று வெலிகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த 8 சந்தேகநபர்களில், வெலிகம காவல்நிலைய பதில் பொறுப்பதிகாரி உபுல் குமார, சட்டத்தரணி ஊடாக கடந்த 4 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் தேஷபந்து தென்னகோன் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்த நிலையில் அது தொடர்பான முடிவு இன்று(17) அறிவிக்கப்படவுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சுமார் மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும், தேஷபந்து தென்னகோன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்வதற்கு ஆறு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் தேஷபந்து தென்னகோனின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மட்டக்களப்பில் அமைதியான முறையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமானது

மட்டக்களப்பில் அமைதியான முறையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமானது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.