இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கிளெமென்சியோ 25 நடவடிக்கையில் பங்கேற்கவுள்ள பிரெஞ்சு கடற்படையின் நாசகாரி கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பிரான்சின் அனைத்து நட்பு நாடுகளுடனும் இணைந்து செயல்படுவதை வலுப்படுத்துவதே கிளெமென்சியோ 25 இன் முக்கிய நோக்கமாகும்.

142 மீட்டர் நீளமுள்ள இந்த கடற்படைக் கப்பல் 2024 நவம்பர் 24 முதல் கடலில் தரித்துள்ளது.
இந்த நிலையில், பிரெஞ்சு கடற்படைக் கப்பல் இந்தோ-பசுபிக் நாடுகளுடன் LA PEROUSE 25 போன்ற இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளது.